உலகின் சிறந்த வீரர் தெண்டுல்கர்-கேத்தே பெர்ரி

width="200"

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தே பெர்ரி. ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்று சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தாஜ் ஓட்டலில் தங்கி இருந்த அவர் கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கேத்தே பெர்ரி கூறியிருப்பதாவது:-

தெண்டுல்கரை சந்தித்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவர் உலகின் தலைசிறந்த கிரிகெட் வீரர்களில் ஒருவர் ஆவார். அவருடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும்.

இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினருடனும் எனது நண்பர்களுடனும்  போன் மூலமாக பகிர்ந்து கொண்டேன். ஐ.பி.எல். தொடர் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து போராட்டம்

width="200"


 
இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டு  டெஸ்ட் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் கொழும்புவில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்த்தனே பேட்டிங் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன்  ஜெயவர்த்தனே அதிகபட்சமாக 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இங்கிலாந்து அணியில் பெல் அதிக பட்சமாக 52 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் ஹெரத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
7-வது விக்கெட்டிற்கு களமிறங்கிய விக்கெட் கீப்பரான ஜெயவர்தனே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்வான் 6 விக்கெட்டுகளையும் மோன்டி பனேசர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் 339 ரன்கள் முன்னிலை பெற்றது இலங்கை அணி.
 
இதனையடுத்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இந்த அணியின் கேப்டன் ஸ்டிராஸ் 14 ரன்களிலும், அலைஸ்டர் குக் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
 
ஜோன்னதன் டிராட் 40 ரன்களுடனும் கெவின் பீட்டர்சன் 29 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 229 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடும். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருக்கிறது.
 
சுழல் வீச்சிற்க்கு சாதமான ஆடுகளம் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை சரியாக கணிக்க இயலவில்லை என்றே சொல்லலாம்.      




ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையாடுவார்: மும்பை இந்தியன்ஸ் அணி

width="200"
வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் துவங்க இருக்கும் ஐ.பி.எல்-5 சீஸனின் அனைத்து போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் விளையாடுவார் என அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் இன்று மதியம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
 
இன்று காலை கிடைத்த தகவலின்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான சச்சின் தெண்டுல்கர் கால்விரல் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருக்கிறார் எனவும், அதற்காக ஆபரேஷன் அவர் செய்து கொள்ளப் போகிறார் எனவும், இதனால் இந்த ஐ.பி.எல். சீஸனில் சச்சின் தெண்டுல்கர் ஆடுவது சந்தேகமே என கூறப்பட்டது.
 
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
 
இந்த ஐ.பி.எல். சீஸனின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் தெண்டுல்கர் விளையாடுவார். அவர் தனது கால்விரல் ஆபரேஷனிற்காக செல்லவில்லை. மருத்துவரிடம் சில நாள் சிகிச்சைக்காகவும், ஆலோசனைக்காகவும் சென்றிருக்கிறார். மார்ச் 31 அன்று அவர் மும்பை திரும்புகிறார்.
 
திட்டமிட்ட படி ஏப்ரல் 3 அன்று சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் 5- ன் தொடக்க விழாவில் கலந்து கொள்வார். அதற்கு மறுநாள் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் போட்டியில் விளையாடுவார். இன்று காலை வெளியான தகவல்களில் உண்மை இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.




பொல்லார்ட் 70 பந்தில் 102 ரன்: வெஸ்ட்இண்டீஸ் 42 ரன்னில் வெற்றி- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

width="200"



ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லுசிகாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது.

பொல்லார்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 70 பந்தில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும். ரஸ்சல் 34 ரன்னும், கேப்டன் டாரன் சேமி 31 ரன்னும் எடுத்தனர். பெர்ட்லீ, வாட்சன், டோகர்ட்டி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 46.3 ஓவரில் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 42 ரன்னில் வெற்றி பெற்றது. பெர்ட்லீ அதிகபட்சமாக 48 பந்தில் 59 ரன்னும் (5 சிக்சர், 5 பவுண்டரி), டேவிட் ஹஸ்சி 57 ரன்னும் எடுத்தனர்.

கேமர் ரோச், பிராவோ, டாரன்சேமி, ரஸ்சல் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

3-வது ஆட்டம் டை ஆனது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (25-ந்தேதி) நடக்கிறது.




ஐ.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் நாளை டிக்கெட் விற்பனை

width="200"



5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், தர்மசாலா, புனே, விசாகப்பட்டணம், மொகாலி, கட்டாக் ஆகிய நகரங்களில் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டம் நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் 7 லீக் ஆட்டமும், தகுதி சுற்று (2) ஆட்டமும், இறுதிப் போட்டியும் நடக்கிறது. ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (25-ந்தேதி) தொடங்குகிறது. காலை 11.30 மணி முதல் 5.30 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். 26-ந்தேதியும் டிக்கெட் விற்பனை நடைபெறும். காலை 9 மணி முதல் 5.30 மணி வரை டிக்கெட்டுகள் விற்கப்படும். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளைக்காக டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.

இந்தப் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.700 ஆகும். இது ஏ,பி,சி ஸ்டாண்டுகளின் கீழ்பகுதி ஆகும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.15,000 (பாக்ஸ் டி) ஆகும். ரூ.1,200 (ஏ.பி.சி மேல் பகுதி), ரூ.3,000 (டி3, எம்.சி.சி), ரூ.5,000 (பெவிலியன் டெரஸ்), ரூ.7,000 (அண்ணா பெவிலியன்), ரூ.8 ஆயிரம் (ஏ மற்றும் பி பாக்ஸ்) ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்கப்படும். www.chennaisuperkings.com என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க விழா ஏப்ரல் 3-ந்தேதி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது.




ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்டன் ஆகிறார் கங்குலி

width="200"


 
ஐந்தாவது ஐ.பி.எல் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி துவங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவருக்கு பதிலாக புதிய கேப்டன் மற்றும் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
முதல் மூன்று தொடர்களில் நடிகர் ஷாருக்கானின் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணிக்கு கேப்டனாக இருந்தார் கங்குலி. இவரது தலைமையில் கொல்கத்தா அணி பெரிய அளவில் சோபிக்காததால், நான்காவது தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின், கடந்த முறை அறிமுகமான புனே வாரியர்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்தது. தற்போது புனே வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக, கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து புனே அணியின் உரிமையாளர் சுப்ரதா ராய் கூறுகையில், 'ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான புனே அணியின் கேப்டன் மற்றும் ஆலோசகராக கங்குலியை நியமித்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது அனுபவம், வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன். இவர், அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருந்து வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.




தடகள வீரர் உசைன் போல்ட் நடித்துள்ள ஒலிம்பிக் விளம்பர படத்திற்கு பெரும் வரவேற்பு

width="200"


 
100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயங்களில் உலக சாதனை படைத்தவரான, உலக தடகள சாம்பியன் உசைன் போல்ட், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  
 
ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட், அந்த விளம்பர படத்திலும் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்கிறார். லண்டன் விமான நிலையத்தில் இருந்து ஒலிம்பிக் அரங்கத்தை ஓடியே அடைய வேண்டும் என உசைனிடம் ஒருவர் சவால் விடுகிறார். அந்த சவாலை ஏற்கும் போல்ட், ஒலிம்பிக் போட்டிக்கான ஓட்டப்பந்தய எல்லைக் கோட்டை சரியான நேரத்தில் அடைகிறார். போல்ட்டுக்கு சவால் விடுத்த நபரே, போட்டியை துவக்கி வைக்கிறார். இவ்வாறு அந்த விளம்பர படம் முடிகிறது.
 
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன்னணி வீரர்களில் உசைன் போல்ட்டும் ஒருவர். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் அவர் பங்கேற்க உள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India